150வது பிறந்த நாள்: மகாத்மா காந்தி சமாதியில் சோனியா, ராகுல் மரியாதை

டில்லி:

காத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சமாதியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

சோனியாகாந்தி மரியாதை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள  காந்தி நினைவிடத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு  மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

குடியரசு தலைவர் பிரதமர்  ஆகியோர் காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.

 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மரியாதை

அதைத்தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் காந்தி சமாதிக்கு வந்த மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மூத்த காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்த அகிம்சை வழியில் வென்றெடுத்த மாமனிதர் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2 (இன்று) காந்தி ஜெயந்தியாக  உலகம்முழுவதும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.