வாசுதேவவன் (Vasu Devan) அவர்களின் முகநூல் பதிவு..
குற்றத்தின் பின்புலத்தில் எப்போதும் ஒரு குறிப்பிட்ட மதம் மட்டுமே இருக்கவேண்டும் என ஒரு சிலரின் ஆபத்தான/விஷமத்தனமான கருத்தை கேள்விப்படும்போது, நேருவின் தலைமைக்குணம், நேர்மை, புத்திக்கூர்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
முதல் பிரதம மந்திரி நேருவுக்கு அந்தரங்க காரியதரிசியாக இருந்தவர் எம். ஓ. மத்தாய். 1946 முதல் 1959 வரை நேருவுடனேயே இருந்தவர்.
_40144711_nehrugandhi_ap238
 
இவர் எழுதியுள்ள “Reminiscences of the Nehru Age”   என்ற நூலில் ஒரு சம்பவத்தை  விவரிக்கிறார்.
ஜனவரி 30 1948ல் காந்தியார் சுட்டுக் கொல்லப்படுகிறார். இச்செய்தியை உலகுக்கு தெரிவிக்க  நேரு தன் காரில், ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்துக்கு  விரைகிறார். வழியில் மத்தாயையும் தன்னுடன் அழைத்து செல்கிறார்.
“அப்போது நேரு ஒரு குழந்தைபோல நடுங்கிக் கொண்டிருந்தார்’ என்கிறார் மத்தாய்.  நேருவுக்கு ஒரு புறம் காந்தியாரின் மரணம் மிகப்பெரிய துயரத்தை கொடுத்தாலும் மறுபுறம் இதனால் மதச்சண்டை வராமல் இருக்கவேண்டும் என்ற கவலை மேலோங்கியிருந்தது.  அதனால்தான் நேரு, காந்தியார் சுடப்பட்டதை தெரிவிக்கையில், அவர் (காந்தியார்) சுடப்பட்டது இந்து தீவிரவாதியால் என்பதை முதலிலே தன் உரையில் சொல்லிவிடுகிறார்.
அதாவது நேருவுக்கு தன் நாட்டு நலன் முக்கியம் என்பதை மத்தாய் விவரிக்கிறார். காந்தியாரின் மரணம் என்ற துயரச் சம்பவம் ஒரு புறம் இருந்தாலும் நேருவுக்கு காந்தியாரை ஒரு முஸ்லீம் கொன்றுவிட்டான் என்ற தவறாண எண்ணம் ஏற்பட்டு அதன்மூலம் வன்முறை பரவிவிடக்கூடாது என்ற உயர்ந்த நோக்கம் இருந்ததை மத்தாய் பதிவுசெய்கிறார்.
சில கொடூரமான சிரிப்பு நடிகர்களுக்கு நேரு என்பவர் யார் எனத்தெரியுமா?”