“காந்தியும், ஹிட்லரும் ஒரே வீட்டில்… “ : சகுந்தலாவின் காதலன் படத்தின் கரு இதுதானாம்

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’.  இந்த படத்தில் கதாநாயகியாக பானு நடிக்கிறார்.

இவர்களுடன் காமெடி நடிகர் கருணாஸ், சுமன், பசுபதி, நான் கடவுள் ராஜேந்திரன், ஜெகன், ராஜ்கபூர், மனோபாலா, மனோ சித்ரா, ஜார்ஜ், நிப்பு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிப்பதோடு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசை அமைத்திருக்கிறார் இயக்குனர் பி.வி.பிரசாத்.

இவர் ஏற்கனவே,  ‘காதலில் விழுந்தேன்’  என்ற படத்தை இயக்கி உள்ளார்.

இவர் தற்போது,  ‘சகுந்தலாவின் காதலன்’  என்ற படத்தை எடுத்து, தானே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “காதலில் விழுந்தேன்’ எப்படி வெற்றி பெற்றதோ, அது மாதிரி ‘சகுந்தலாவின் காதலனு’ம் வெற்றி பெறும் என்றும், ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நகுல் கதாபாத்திரம் எப்படி பேசப்பட்டதோ, அதைப்போல இதில் ஹரி கிருஷ்ணன் என்கிற என் கதாபாத்திரம் வித்தியாசமாக உணரப்படும் என்றார்.

மேலும், “ஒரே வீட்டில் காந்தியும் ஹிட்லரும் இருந்தால் எப்படி இருக்கும் என்கிற கற்பனையே தற்போது படத்திற்காக  திரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

காந்தி தனது பக்கம் ஹிட்லரை இழுக்க முயற்சிப்பதும், ஹிட்லர் தனது பக்கம் காந்தியை இழுக்க முயற்சிப்பதும் தான் கதை.

இதை எந்த அளவுக்கு சுவாரஸ்யமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லி இருக்கிறோம். சொல்ல வந்த இந்த கதையை ஐந்து கோணங்களில் ஐந்து சம்பவங்களில் உள்ளடக்கி சொல்லி உள்ளோம்.

இதற்கான படப்பிடிப்பு  சென்னை, ஹைதராபாத், ராஜமுந்திரி, செங்கல்பட்டு, பாண்டிச்சேரியில் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த படத்திற்கு வசனம் –  ஆ.வெண்ணிலா, கலை – சகு, நடனம்  –  பாபி ஆண்டனி, ஸ்டண்ட் – சுப்ரீம் சுந்தர், ஆக்ஷன் பிரகாஷ, எடிட்டிங்  –  வி.டி.விஜயன், என்.கணேஷ் குமார், தயாரிப்பு மேற்பார்வை – மோகன், கணேசன், ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி.