வாஷிங்டன்:

மெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவமத சகோதரர் ஒருவருக்கு, காந்தி எழுதிய கடிதம் விற்பனை செய்யப்பட உள்ளது.

பிரபலமானவர்களின் பொருட்களை வாங்கி ஏலம் விடும் ராப் கலெக்ஷ்ன் நிறுவனம், காந்தியின் கடிதத்தை விற்பனை செய்ய முன்வந்துள்ளது. இந்த கடிதத்திற்கு 50 ஆயிரம்  டாலர்கள் விலை நிர்ணயம் செய்துள்ளது.

 

டந்த 1926-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தில் இருந்து  அந்த கடிதத்தை, அமெரிக்க மத தலைவருக்கு  காந்தியடிகள் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்  எம்கே காந்தி என்று தெளிவாக கையெழுத்தும் போட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் காந்தியடிகள் எழுதியிருப்பதாவது, “அன்புள்ள நண்பரே, எனக்கு உன் கடிதம் கிடைத்தது. நீ எனக்கு அனுப்பிய மதத்தை ஏற்றுக்கொள்வது குறித்த கடிதம் குறித்து எனக்கு பயம் இல்லை. மனித குலம் குறித்து போதிப்பவர்களில் ஏசு கிறிஸ்து சிறந்த போதகர்களில் ஒருவராக இருந்தார் என்ற நம்பிக்கைக்கு அப்பால் செல்ல முடியவில்லை ” என்று காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதம் தற்போது பென்சில்வேனியாவை சேர்ந்த ராப் கலெக்ஷன்கள் என்ற நிறுவனத்தின் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த கடிதம் பல ஆண்டுகளாக தனிப்பட்ட ஒரு சேகரிப்பாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது இந்த கடிதம் விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராப் கலெக்ஷன் நிர்வாகி,  நாதன் ராப்,  இது ஒரு எமோஷனலான கடிதம் என்று தெரிவித்துள்ளார்.  இயேசுவை பற்றி காந்தி குறிப்பிட்ட வேறு எந்தக் கடிதமும் பொதுச் சந்தைக்கு வந்ததாக எங்கள் ஆய்வில் தெரியவில்லை. இதன் விற்பனை 50 ஆயிரம் அமெரிக்க டாலரில் (இந்திய மதிப்பில் ரூ.33 லட்சத்து 60 ஆயிரத்துக்கு 750) தொடங்கி நடந்து வருவதாக கூறி உள்ளார்.

மேலும், காந்தியின் பார்வையில் உலகத்தின் மதங்கள் அனைத்தும் சமாதானத்திற்காகவே உருவானதாகவும், மனிதகுலத்தின் போதனையாக இயேசு குறித்த அவரது நம்பிக்கை, சக மனிதருடன் ஒத்துழைப்பதற்கான அவரது முயற்சிகளை காட்டுகிறது என்றும் கூறி உள்ளார்.

கிறிஸ்வத மதம் குறித்தும் காந்திய எழுதிய ஒரே கடிதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.