சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என தமிழகஅரசு அறிவுறுத்தி உள்ளது.

வரும் 22ந்தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதி மன்றமும் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில்,  விநாயகர் சதுர்த்தி விழாவை பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே கொண்டாட வேண்டும் என  தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

கொரோனா பேரிடரால் மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகளை மத்திய அரசு தடை செய்து உள்ளதாகவும்,  மத்திய அரசின் வழிகாட்டுதல்படியே பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள தமிழகஅரசு,   விநாயகர் சதுர்த்தியன்று பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே வழிபாடு நடத்த வேண்டும்  என்றும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் தமிழக அரசின் ஆணையை பின்பற்ற உயர்நீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.