ஆப்பிரிக்க நாடுகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலக் கொண்டாட்டம் – வீடியோ

 

அக்ரா :

விநாயக சதுர்த்தி விழா இந்தியாவில் குறிப்பாக மும்பையில் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. விதவிதமான வடிவிலும் அமைப்பிலும் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு பல்வேறு கோயில்களின் முன் வைத்து வழிபட்டு மூன்றாம் நாள் நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு உலகம் முழுக்க கொரோனா தொற்று நோய் காரணமாக முடங்கியுள்ளதால் மக்கள் பொதுஇடங்களில் ஆரவாரம் செய்யாமல் தங்கள் வீடுகளிலேயே விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தியாவில் மட்டும் தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதாக எண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கூறி அமெரிக்க அதிபராகப் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், அமெரிக்காவிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இங்கு மட்டுமல்ல மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவிலும் விநாயகர் சதுர்த்தி ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிரிட்டிசாரின் காலனியாதிக்கத்தின் போது அந்நாட்டில் வாணிபம் செய்யச் சென்ற இந்தியர்களால் இந்து மதத்தின் மீது நம்பிக்கைக் கொண்ட அந்நாட்டு பழங்குடியினர் ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இது குறித்த செய்தியொன்றை பிபிசி செய்தி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் இங்கு கடைபிடிப்பது போலவே மூன்று நாட்கள் வழிபாட்டிற்குப்பின் சிலைகளை நீர்நலைகளில் கரைப்பதை வழக்கமாக செய்துவருகின்றனர் கானா நாட்டு பழங்குடி மக்கள்.

வீடியோ இணைப்பு …….நன்றி பி.பி.சி