தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள்! இந்து முன்னணி தலைவர் தகவல்

திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதிலும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி முடிவு செய்துள்ளதாக  மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்  தெரிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் தற்காலிகமாக  விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு  பக்தர்கள் தரிசித்து வருவதும்,  பின்னர், அதை நீர்நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைப்பதும் வழக்கம்,  இந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, விநாயர் சிலை வைக்கவும், விஜர்சனம் செய்யவும் அனுமதி வழங்குமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்த நிலையில், செய்தியளார்களை சந்தித்த இந்து முண்ணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் ,  இந்துக்களை ஜாதிப்பாகுபாடு இல்லாமல் ஒன்றிணைத்து கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். நடப்பாண்டும், கொரோனா தொற்று பாதிப்புக்கு மத்தியில், தமிழகம் முழுவதிலும் விநாயகர் சதுர்த்தியையொட்டி,  ஆகஸ்ட் 22 ம் தேதி சுமார் 1.5 லட்சம் சிலைகளை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகத்தில் உள்ள இந்து முன்னணி தொண்டர்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி கமிட்டியினர் காப்புக் கட்டிக் கொள்ளுவது, மாலை அணிந்து கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பகுதிவாரியாக சமூக இடைவெளியுடன் நடைபெறும்.

பொது ஊர்வலம், பொது நிகழ்ச்சி கிடையாது. அரசின் வழிமுறை பின்பற்றி எளிமையாக நடைபெறும். இந்து முன்னணியில், அந்த சிலைகள் விசர்ஜனம் செய்யும் பணியை மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.