உத்தரகாண்ட்.

ங்கை, யமுனை நதிகளுக்கு உயிர் வாழும் மனிதர்கள் அந்தஸ்து வழங்கி உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கங்கை இந்துகளின் புனித நதியாக திகழ்கிறது. இது இந்து மத கடவுள் கங்கா எனவும் அழைக்கப்படு கின்றது. இந்த நதியினை சார்ந்து மனிதன் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்கின்றன.

 

இந்தியாவின் புனித நதியான கங்கா மற்றும் யமுனா நதிகளுக்கு ‘வாழும் மனிதர்கள்’ என்ற கவுரவம் அளித்துள்ளது. இதன் காரணமாக நதிகள் மாசுபடுவதில் இருந்து பாதுகாக்க, இந்த சட்டப்பூர்வ அந்தஸ்து உதவும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏற்கனவே  நியூசிலாந்தில் உள்ள வான்கானுய் நதிக்கு  வாழும் மனிதருக்கான அந்தஸ்து வழங்கப்பட்டதை மேற்கோள் காட்டி, தற்போது கங்கை, யமுனை நதிகளுக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி கங்கையை தூய்மைப்படுத்தும் நமாமி கங்கை திட்டத்தின் இயக்குநர் மற்றும் உத்தராகண்ட் உயர்நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் ஆகியோர் இரு நதிகளின் பெற்றோராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனிதருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்ற இந்த நதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயல்பாடுகள், தனிப்பட்ட தேவைக்கு நதிகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை தீவிரமாக கண்காணித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர்.

வாழும் மனிதர் அந்தஸ்து பெற்றுள்ளதால் நதிகள் தூய்மைப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்கை இந்தியாவின் தேசிய நதி. இது இமய மலையில் உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக் எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது.

பிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

கங்கை ஆறு மொத்தம் 2525 கி.மீ ஓடுகிறது. இந்தியாவின் பிரபல புன்னியஸ்தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா, கொல்கத்தா ஆகியவை கங்கை கரையில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள்.