‘கரகாட்டக்காரன் 2’ பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குநர் கங்கை அமரன் அறிவிப்பு…!

1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கரகாட்டக்காரன்’. அப்போதைய காலகட்டத்திலேயே வசூலில் சாதனை செய்தது.

தற்போது ‘கரகாட்டக்காரன்’ 2-ம் பாகம் திட்டமிடப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கங்கைஅமரன் ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நடித்தவர்களுக்கு குழந்தை பிறந்து, இப்போது இரண்டு தலைமுறைகளும் சந்தித்தால் எப்படியிருக்கும் என்பது மாதிரி ப்ளான் பண்றோம். இப்போது உள்ள நடிகர்களும் நடிப்பார்கள். ‘கரகாட்டக்காரன்’ படத்தில் நடித்தவர்கள் அனைவரிடமும் பேசிட்டு இருக்கோம். அனைத்துமே நல்லவிதமாக போய்க் கொண்டிருக்கிறது. இப்போது உள்ள நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Gangai amaran, Goundamani, kanaka, ramarajan, senthil
-=-