‘கேங்ஸ் ஆப் மெட்ராஸ்’ – திரை விமர்சனம்

ஒரு கேங்ஸ்டர் திரில்லர் கதையை கையில் எடுத்து, அதற்கு சரியான திரைக்கதை அமைத்து படத்தை ரசிக்கும்படி இயக்கியுள்ளார் சி.வி.குமார்.

சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் கும்பலால் தனது கணவனை இழந்த பெண், கணவனின் மரணத்திற்கு பழி வாங்குவது தான் படத்தின் கரு.

இந்து பெண்ணான ஜெயா (பிரியங்கா ருத்) இஸ்லாம் மதத்துக்கு மாறி இப்ராஹிமை (அசோக்) திருமணம் செய்து கொள்கிறார்.

பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் வேலு பிரபாகரனின் கேங்கில் சேர்ந்து இப்ராஹிம் வேலை செய்கிறார். ஆனால், தொழில் போட்டியில் இப்ராஹிம் வேலு பிரபாகர் உடந்தையில் என்கவுண்டர் செய்யப்படுகிறார். இந்த தகவல் ஜெயாவுக்கு தெரிய வர அவரும் கேங்கஸ்டராக மாறி தனது கணவனை கொன்றவர்களை பழிவாங்குகிறார் .

இசையமைப்பாளர் ஹரி தவுசியா , இருந்தாலும் சியாமலங்கனின் பின்ணனி இசை மிரட்டலாக இருக்கு . அவரின் கார்த்திக் குமாரின் ஒளிப்பதிவு , ராதாகிருஷ்ணன் எடிட்டிங்கில் தொய்வில்லாமல் படம் செல்லுகிறது.

ரசியாவின் நடிப்பு அபாரம். பிரியாணி சாப்பிடும் போது எதிரிகளை பார்க்கும் ரியாக்ஷன் , அவர்களை சுட்டு வீழ்த்திவிட்டு பிரியாணி சாப்பிடும் ரியாக்ஷன் என அருமையாக செய்திருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி