சினிமா பைனான்சியர் ‘போத்ரா’வுக்கும் குண்டாஸ்!

சென்னை,

ல்வேறு பண மோசடிகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பிரபல சினிமா பைனான்சியர் போத்ராமீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

ஏற்கனவே பலவேறு புகார் காரணமாக பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தங்க வியாபாரி ஹானந்தர் என்பவர் அளித்த பண மோசடி வழக்கில் சினிமா பைனான்சியர் போத்ரா மற்றும் அவரது மகன்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவர் மீது புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

பண மோசடி, நில அபகரிப்பு என பல குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பைனான்சியர் போத்ராவை குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டதை தொடர்ந்து, புழல் சிறையில் உள்ள போத்ரா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.