கங்குலியை கவலைகொள்ள வைத்த வெறிச்சோடிய கொல்கத்தா..!

கொல்கத்தா: தொடர்ந்து விரட்டிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், கொல்கத்தா நகரம் வெறிச்சோடியதை, சில படங்களின் மூலம் மண்ணின் மைந்தனும் பிசிசிஐ தலைவருமான கங்குலி வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் நெருக்கடி வாய்ந்த மற்றும் எப்போதும் பரபரப்பாக இயங்கும் முக்கிய நகரம் கொல்கத்தா. ஆனால், ஊரடங்கு உத்தரவால் அந்நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது நாட்டின் இதரப் பகுதிகளைப்போல்.

எனவே, அப்படி வெறிச்சோடிய கொல்கத்தாவின் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள அவர், “என் நகரத்தை இதுபோன்று நான் பார்ப்பேன் என எப்போதும் நினைத்ததில்லை” என்று டிவிட்டரில் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கங்குலி கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மற்றும் அந்நகரத்தை மிகவும் விரும்புபவர். மேலும், இன்றைய இக்கட்டான நிலை விரைவில் சீரடையும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.