நடிகை தீபிகா படுகோனே, மானேஜர் வீட்டில் கஞ்சா பறிமுதல்..

 

மும்பை :

ந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை விசாரித்த போலீசாருக்கு, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும், இந்தி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், இது குறித்து மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த மாதம் நடிகைகள் தீபிகா படுகோனே, ராகுல் ப்ரித் சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோரிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை செய்து அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர்.

தீபிகா படுகோனேயின் மானேஜர் கரிஷ்மா பிரகாஷிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், போதை மருத்து கடத்தல்காரன் ஒருவனிடம் விசாரணை நடத்தியபோது கிடைத்த தகவலின் பேரில் மும்பை வர்சோவா பகுதியில் உள்ள கரிஷ்மாவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கரிஷ்மா வீட்டில் இருந்து சிறிதளவு கஞ்சாவும், கஞ்சா எண்ணையும் பறிமுதல் செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக கரிஷ்மாவை இன்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

– பா.பாரதி