விசாகப்பட்டிணம்:
ந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஆலை ஒன்றில் விஷவாயு கசிவு ஏற்பட்டால் அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மயங்கி விழுந்த நிலையில்,   சிறுமி உள்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினார். இது தொடர்பான பதபதைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
விசாகப்பட்டினம் அருகே  உள்ள  கோபால்பட்டினத்தில் உள்ள வேங்கடாபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான  ரசாயன ஆலையில் இன்று அதிகாலை திடீரென ரசாயன வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.
கோபாலபட்டினத்திற்கு அருகிலுள்ள வேபகுந்தாவின் எல்ஜி பாலிமர்களிடமிருந்து கசிந்த பாலி வினைல் குளோரைடு வாயு (அல்லது திருத்தத்திற்கு உட்பட்டது) கசிவால்  ஏராளமான மக்கள் மயக்கமடைந்தனர். மக்கள் வாந்தி மற்றும் குமட்டல் இருப்பதாக புகார் கூறுகின்றனர்.
இந்த வாயுவின் தாக்கம் சுமார் 3 கிமீ சுற்றுப்பரப்புக்குப் பரவிய நிலையில், அந்த பகுதியில் இருந்த பல கிராம மக்கள் வாயுவை சுவாசித்ததும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும், ரோட்டிலேயே மயங்கி விழுந்த நிகழ்வுகளும், காடுகளுக்கு சென்றவர்கள் அங்கேயே மயங்கிவிழுந்த சம்பவங்களும் நடந்தேறியது.
இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த வாயு கசிவில் சிக்கி   6 வயது சிறுமி உட்பட 7 பேர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு துறையினர் தகுந்த பாதுகாப்பு சம்பவ இத்துக்கு வந்து மயங்கி கிடந்தவர்களை அங்கிருந்து தூக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் அந்த பகுதியில்உள்ள கிராமங்களைச் சேர்ந்த 2ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதுவரை 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆந்திர மருத்துவக் கல்லூரி முதல்வர் உறுதி செய்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
வாயுபரவலை தடுக்கும் வகையில், ரசாயண ஆலைமீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் முகக்கவசம் அணியும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கூறிய அந்தப்பகுதி மக்கள் கூறியதாவது,  பிளாஸ்டிக் பொறியியல் நிறுவனமான எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் விஷவாயுவான ஸ்டைரீன் வாயுவைப் பயன்படுத்துகிறது. இது வாயு கலன் வெடித்து வாயு கசிந்திருக்கலாம் என்று   தெரிவித்து உள்ளனர்.
கிராம மக்கள் ஆங்காங்கே மயங்கி கிடக்கும் பதபதைக்கும் வீடியோ…