ஐந்து வருடம் திட்டமிடப்பட்ட கவுரி லங்கேஷ் கொலை : அதிர்ச்சி தகவல்

பெங்களூரு

ந்து வருட திட்டத்துக்குப் பின் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதாக சிறப்பு புலனாய்வுப் ப்டை தலைவ்ர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் அவருடைய வீட்டு வாசலில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த கொலையை விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டது. அந்த விசாரணையில் இந்து அமைப்பான சனாதன் சன்ஸ்தா இந்தக் கொலையை செய்துள்ளது கண்டறியப்பட்டது.

இந்த கொலை பற்றிய 9023 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை கடந்த வெள்ளிக்கிழமை மாலை நீதிமன்றத்தில் நான்கு காவலர்களால் அளிக்கப்பட்டது. அத்துடன் இந்த வழக்கின் சிறப்பு அரசு வ்ழக்கறிஞர் பாலன் கவுரி லங்கேஷ் கொலையின் பின்னணியில் சனாதன் சன்ஸ்தா அமைப்பு உள்ளதாகவும், கொலையலிகள் அனவரும் கைது செய்யபட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து சிறப்பு புலனாய்வுப் படை தலைவர் அனு சேத் செய்தியாளர்களிடம், “பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்த சிறப்பு புலனாய்வுப் படையினர் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள்னர். அந்த விசாரணையின்படி கவுரி லங்கேஷை கொலை செய்ய கடந்த 5 வருடங்களாக திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த கொலையாளிகள் இதற்காக பல இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தி உள்ளனர். அது மட்டுமின்றி அவர்கள் ’தி ஒயர்’ ஊடக பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன், மற்றும் அந்தார தேவ் சென், தமன் லால் உள்ளிட்ட 26 பேரை கொல்ல திட்டமிட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்” என கூறி உள்ளார்.