சிஆர்பிஎப் வீரர்களது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற காம்பீர்!

--

Gautam Gambhir to bear education expenses of slain CRPF jawans’ children

 

மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப்., வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை தாம் ஏற்பதாக கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் பலியாயினர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.அரசு தரப்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், பலியான அனைத்து வீரரகளது குழந்தைகளின் முழு கல்விச்செலவை தாம் ஏற்கவுள்ளதாகவும், இது தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார்.
கவுதம் காம்பீரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.