கமல் மீது கவுதமி புகார்?

டிகர் கமல்ஹாசன் மீது, நடிகை கவுதி புகார் அளிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கமல் மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கி, தீவிர அரசியலில் இறங்கி இருக்கிறார்.

இந்நிலையில், கமலுடன் சில காலம் சேர்ந்து வாழ்ந்து பிரிந்த நடிகை கவுதமி, கமல் நடித்த படங்களுக்கு, தான்  காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றியதற்கான சம்பளம் அளிக்கப்படவில்லை என்று புகார் கூறினார்.

மேலும், “அந்த சம்பளப்பணம்தான் என் எதிர்கால வாழ்க்கைக்கான ஆதாரம். இப்போது, லஞ்சம் – ஊழலுக்கு எதிராக அரசியல் பேசும் கமல், எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை செட்டில் செய்து விட்டு, ஊழல்வாதிகள் குறித்து பேச வேண்டும்”  என்றும் கவுதமி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சம்பளத்துக்கான ஆதாரத்தை அளித்தால் பணம் தர தயாராக இருப்பதாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

இந்த நிலையில், கவுதமியை அணுகிய ஆளும் அதிமுகவைச் சேர்ந்த சிலர், கமல் மீது  காவல்துறையில் புகார் அளித்தால் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆளும் அ.தி.மு.க.வை கமல் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆளுந்தரப்பினருக்கு கவுதமி எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்றும், யோசித்து சொல்வதாக தெரிவித்ததாகவும் இருவித தகவல்கள் வெளியாகி உள்ளன.