‘எஃப்.ஐ.ஆர்’ முக்கியக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனன்…!

--

கெளதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படம் ‘எஃப்.ஐ.ஆர்’.

விஷ்ணு விஷால் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தின் தலைப்புக்கு ‘ஃபைசல் இப்ராஹிம் ரய்ஸ்’ என்று அர்த்தம் எனப் படக்குழு குறிப்பிட்டுள்ளது.

மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், ‘யூடியூப்’ பிரசாந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில், அஷ்வந்த் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

இப்படம் 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

நவம்பர் 24-ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தற்போது, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கெளதம் மேனனும் நடித்து வருகிறார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று (டிசம்பர் 27) முதல் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.