‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படத்தை இயக்கியது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்ட கெளதம் மேனன்….!

சிம்பு, த்ரிஷாவை வைத்து கெளதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

ஒரு பக்கம் விண்ணைத் தாண்டி வருவாயா ரசிகர்கள் பழைய நினைவுகளை சுகமாக அசை போடுகிறார்கள். மறுபக்கம் நெட்டிசன்களோ த்ரிஷா மடியில் சிம்பு குழந்தையாக இருக்கும் மீம்ஸுகளை போட்டு கிண்டலடித்து வருகிறார்கள் .

அந்த குறும்படத்தை இயக்கியது எப்படி என்பது குறித்த வீடியோ ஒன்றை கெளதம் மேனன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், சிம்புனா வம்புனு வெட்டிப் பேச்சு பேசுவர்கள் இதை முதலில் பார்க்கவும். கவுதம் ஒரு வீடியோ கால் பண்ணி சொல்ல கச்சிதமாக நடித்துக் கொடுத்துள்ளார் சிம்பு. படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வர மாட்டார், இயக்குநர்களையும், பணம் போட்ட தயாரிப்பாளர்களையும் கதற விடுவார் என்று பேசியவர்கள் சிம்பு சமத்தாக நடித்துக் கொடுத்துள்ள இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.