கமல் 2ம்பாகம் படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி? கவுதம்மேனன் முடித்தார்..

--

மல்ஹாசன் நடித்த ’வேட்டையாடு விளை யாடு2’ ம் பாகம் இயக்கவுள்ளார் கவுதம் மேனன். சில மாதங்களுக்கு முன் கமலை சந்தித்த கவுதம்மேனன். இதுபற்றி அவரிடம் கூறி ஒகே பெற்றார். இதையடுத்து படத்தின் ஸ்கிரிப்ட்டில் தீவிரம் காட்டினார் இயக்குனர். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் இப்படத்தை தயாரிக்க உள்ளது.


தற்போது ’வேட்டையாடு விளையாடு’ படத்தின் 120 பக்கம் கொண்ட ஸ்கிரிப்ட் இயக்குனர் முடித்திருக்கிறார். இன்னும் பத்து இருபது நிமிடங்களுக்கான ஸ்கிரிப்ட்டை முடிக்க வேண்டி உள்ளதாம். கவுதம் மேனன் ஏற்கனவே வேல்ஸ் பட நிறுவனத்துக்காக வருண் நடிக்க ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ என்ற படத்தை இயக்குகிறார்.