கமல் – ரஜினி… கவுதமி ஆதரவு யாருக்கு?

ஸ்ரீவில்லிபுத்தூர்

டிகர்கள் கமல், ரஜினி ஆகிய இருவரும் அரசியல் கட்சி துவங்க இருக்கும் நிலையில், யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு நடிகை கவுதமி பதில் அளித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று  (பிப்.,18) நடிகை கவுதமி,  ஆண்டாளை தரிசனம் செய்தார். அப்போது மக்கள் நலனுக்காக அவர் ஆண்டாள் பெயரில் அர்ச்சனை செய்தார்.

பிறகு வெளியில் வந்த அவரிடம், செய்தியாளர்கள், “ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவதாகவும், கட்சி துவக்குவதாகவும் அறிவித்து இருக்கிறார்கள். உங்களது ஆதரவு ஆதரவு யாருக்கு? “ என்று கேட்டனர்.

அதற்கு அவர், “ அவர்கள் கட்சி துவங்கிய பிறகு, கொள்கைகளை விளக்கவேண்டும்… மக்களுக்கு  என்னென்ன செய்யப் போகிறார்கள், என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளனர் என்பதை முதலில் வெளியிடட்டும். அதற்கு பிறகு தான் நான் மட்டுமல்ல, மக்களாக நாம் அனைவரும் முடிவு எடுக்க முடியும். இதுவரை அவர்களின் கொள்கைகள் பற்றிய விபரம் ஏதும் தெரியவில்லை.

இப்போதைக்கு,  நீங்கள் எப்படி அவற்றை தெரிந்து கொள்ள காத்திருக்கிறீர்களோ, அதே போல் நானும் காத்திருக்கிறேன்” என்று கவுதமி தெரிவித்தார்.