மும்பை: கொரோனா நிதித் திரட்டும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதற்கு சாத்தியமில்லை என்று தன் கருத்தைக் கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர்.

கொரோனா பரவல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டும் பொருட்டு, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை, எங்கேனும் ஒரு பொது இடத்தில் வைத்து நடத்த வேண்டுமென்று கருத்து தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயப் அக்தர்.

சோயப் அக்தரின் கருத்து குறித்து பேசியுள்ள கவாஸ்கர், “லாகூரில் பனிப்பொழிவிற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெறுவதற்கு சாத்தியமில்லை.

இந்த இரு அணிகளும் உலகக்கோப்ப‍மைற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே இணைந்து பங்கேற்கும். தற்போது, இந்த இரு அணிகளுக்கான போட்டித் தொடரை நடத்துவது சரியாக இருக்காது” என்றுள்ளார் கவாஸ்கர்.