இந்துக்கள் கோவில்களை சுட்டிக்காட்ட ஆபாச சிற்பங்கள் இருக்கும் என திருமாவளவன் பேசியது சர்ச்சையானது .அதற்கான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இதனால் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார் திருமாவளவன்,

இந்நிலையில் இந்து மதத்தை விமர்சித்ததாக திருமாவளவன் பற்றி நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் சர்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் காயத்ரி ரகுராமனின் ட்விட்டர் கணக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் போன் மூலமாக தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால் தனக்கு தன்னுடைய வீட்டிற்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார் நடிகை காயத்ரி ரகுராம்.

விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்த விவகாரம் தொடர்பாக நடிகை காயத்திரி மீது அக்கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஆபாசமாக திட்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் காயத்ரி ரகுராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.