விஜய் சேதுபதி பேச்சுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்….!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பொதுவான பல விஷயங்கள் பற்றி பேசினார்.

அப்படி பேசுகையில் “மதத்தின் பெயரால் சண்டை போடுபவர்களா பற்றியும் பேசினார் விஜய் சேதுபதி. சாமி பல கோடி வருடமாக இங்கு இருக்கு. சாமி தன்னை காப்பாற்றிக்கொள்ளும். அதை மனிதன் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. சாமியை காப்பாற்றுகிறேன் என கூறும் கூட்டத்தோடு பழகாதீர்கள்” எனவும் விஜய் சேதுபதி பேசினார்.

இந்த கருத்துக்கு பிக் பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.”கடவுளை பின்பற்றாதவர்கள் மனதில் பல அழுக்குகளை வைத்திருப்பார்கள். மனிதர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பொய் சொல்வார்கள். அப்படி பட்ட மனிதர்களை நான் நம்பப்போவதில்லை” என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.