காயத்ரி ரகுராம் இயக்கியுள்ள ‘யாதுமாகி நின்றாய்’ ட்ரெய்லர் ரிலீஸ்….!

 

மறைந்த பிரபல நடன இயக்குநரான ரகுராமின் மகளான காயத்ரி ரகுராம் ‘யாதுமாகி நின்றாய்’ படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர் சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையை யாதுமாகி நின்றாய் படத்தின் மூலம் வெளியிட்டுள்ளார் . இதில் அவரே நடித்தும் உள்ளார் .

இத்திரைப்படத்துக்கு அஸ்வின் வினாயக மூர்த்தி இசையமைத்துள்ளார். ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் 19-ம் தேதி அன்று யாதுமாகி நின்றாய் திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.