சென்னையில் கொரோனா தொற்றால் மருத்துவர் சைமன் உயிரிழந்தார். அவரது உடலைப் புதைக்கச் சென்ற ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். தாக்குதல் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மருத்துவர்கள், மருத்துவ சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வேதனையை பகிர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக நடிகை காயத்ரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“நம் உயிரை காக்கும் மக்களுக்கு இதுதான் நாம் கொடுக்கும் மரியாதை என்றால் ஒரு சமூகமாக நாம் தோற்றுவிட்டோம். நமக்காக டாகடர் சைமன், டாகடர் பிரதீப் போன்றோர் செய்த தியாகங்களை நினைவுகூர்வோம். அவர்கள் பாகுபாடு பார்க்கவில்லை. நாமும் பார்க்கக்கூடாது. இது போன்ற ஒரு கடினமான சூழலில் மருத்துவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்க முடிவுசெய்தால் என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள்”

இவ்வாறு காயத்ரி தெரிவித்தார்.