10 ஆயிரம் ரன்கள் இலக்கு: வாப்பை தவறவிட்ட கெய்ல்!

வெஸ்ட் இண்டீஸைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல் , 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல் சாதனையை எட்டும் வாய்ப்பை தவறவிட்டார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடி மன்னனாக வலம் வரும் கிறிஸ்கெய்ல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

டி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை நிகழ்த்த 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 22 ரன்களில் கெய்ல் ஆட்டமிழந்தார். இன்னும் 3 ரன்கள் எடுத்திருந்தால், டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை பெங்களூருவில் கெய்ல் நிகழ்த்தி இருக்கலாம். தற்போது அந்த சாதனைக்கு கெய்ல் மட்டுமன்றி, கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.