விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆதித்ய வர்மா. இதில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார்.

ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் தற்போது ரிலீஸ்க்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் துருவ் விக்ரம் வரும் திங்கள்கிழமை தனது 24வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார். அவருக்கு பிறந்தநாள் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ‘ஆதித்ய வர்மா’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்த அறிவிப்பைப் படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.