டெல்லி:

நாட்டின் முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி நியமனம் செய்யப்படுவார் என மத்தியஅரசு அறிவித்திருந்த நிலையில், தற்போதைய தரைப்படை தளபதியாக இருந்த,  பிபின் ராவத்தை மத்தியஅரசு நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது. பிபின் ராவத் நாட்டில் முதல் முப்படை தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

கடந்த 1962ம் ஆண்டு சீனாவுக்கு எதிரான போரின்போது,, இந்தியாவின் முப்படைகளுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததால் விமானப்படை முழுமையாகப் பயன்படுத்தப்பட வில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதுபோல, 1965ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற  போரின் போது இந்திய கடற்படையிடம் பல்வேறு முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட வில்லை என்று குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டது.

1999-ஆம் ஆண்டில் கார்கில் போருக்கு பிறகு இந்திய அரசு நியமித்த உயர்நிலைக்குழு, முப்படைகளின் தேவை கருதியும் தேச பாதுகாப்பு தொடர்புடைய முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில், அரசுக்கும் முப்படைகளுக் கும் இடையே ஒரு பாலம் போல செயல்பட்டு ஆலோசனை வழங்க உயர்நிலை அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

நாட்டின் மூன்று படைகளான தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய மூன்று பாதுகாப்பு படைகளுக்கும் தற்போது தனித்தனி தளபதிகள் உள்ள நிலையில்,  முப்படைகளுக்கும் சேர்த்து ஒரே தளபதி நியமிக்கப்படுவார் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருந்தது. நீண்டகாலமாக இதுகுறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில்,  சமீபத்தில் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி, தலைமை தளபதிக்குரிய தகுதிகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி  ஏற்கனவே ராணுவ பணியில் ஜெனரல் அந்தஸ்தில் இருப்பவருக்கு நான்கு நட்சத்திர தகுதி உள்ள வர்கள் இந்த பதவிக்கு தகுதியானர்வர்கள் உள்பட பல கட்டுப்பாடுகள்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே, தகுதியான ஒருவர்  முப்படைகளின் தலைமை தளபதி (சிடிஎஸ்) பதவிக்கு நியமிக்கப்படுவார் என்றும், அவர்  அந்த பதவியுடன் சேர்த்து, அவர் பாதுகாப்பு விவகாரங்கள் துறைக்கான தலைவராகவும் செயல்படுவார் என்றும் கூறப்பட்டது.

மேலும், தலைமை தளபதி,  பாதுகாப்பு அமைச்சரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் புதிய தலைமை தளபதி, இந்திய பாதுகாப்புத்துறை ஆயுத கொள்முதல் கவுன்சில் மற்றும் பாதுகாப்பு திட்டமிடல் குழுவின் உறுப்பினராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய நிலையில், பணி மூப்பு, நிபுணத்துவம் அடிப்படையில் புதிய முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்படும் தகுதி வாய்ந்தவர்கள் வரிசையில், தற்போதைய ராணுவ தலைமை தளபதி விபின் ராவத் முன்னிலையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போதைய தரைப்பட தளபதி, பிபின் ராவ், முப்படைகளின் தலைமை தளபதியாக நியமித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.

சிடிஎஸ் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள பிபின் ராவத்தின்  பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். 

பிபின் ராவத் சமீபத்தில், மத்தியஅரசுக்கு ஆதரவாகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதை அவரது பதவி இந்த மாத இறுதியுடன் நிறைவுபெறுகிறது. அதையடுத்து, அவர் முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.