நடிகை ஜெனிலியா கணவருடன் இணைந்து உறுப்பு தானம்..

--

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஜெனிலியா. இவர் தனது நீண்ட நாள் காதலர் இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து மணந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கிய ஜெனிலியா குடும்ப தலைவியாக பொறுப்புகளை கவனித்து வரிகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்,


நடிகை ஜெனிலியா தனது கணவருடன் சேர்ந்து உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறார். இதுபற்றி டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது,’ரிதேஷும் நானும் உடல் உறுப்பு தானம் செய்வது பற்றி நீண்ட நாட்களாக யோசித்து வந்தோம். அது தள்ளிப் போய்க்கொண் டிருந்தது, தற்போது இருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முடிவு செய்திருக் கிறோம். அதற்காக டாக்டர் நோஸர் மற்றும் FOGSI அமைப்பினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என கூறி இருக்கிறார் ஜெனிலியா.