காஷ்மீரில் 275 தீவிரவாதிகள் பதுங்கல்….சூடுபிடித்தது ராணுவ வேட்டை

ஸ்ரீநகர்;

காஷ்மீரில் 60 வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்பட 250 முதல் 275 தீவிரவாதிகள் பதுங்கி செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் பிடிபி அரசு பதவி விலகியதை தொடர்ந்து கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அங்கு தீவிரவாதிகளை ஒழிக்கும் பணி முழு வீச்சில் தொடங்கப்பட்டு உள்ளது. தேசியப் பாதுகாப்பு படை களமிறக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆப்பரேஷன் ஆல்- அவுட்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் 60 வெளிநாட்டு தீவரவாதிகள் உள்பட 250 முதல் 275 தீவிரவாதிகள் செயல்படுகிறார்கள். இவர்கள் 20 முதல் 25 பேர் என குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனர் என ராணுவ கமாண்டன்ட் ஏ.கே.பாத் தெரிவித்துள்ளார். இதில் 15 பேர் ஜம்மு பிராந்தியத்தில் செயல்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் சூடுபிடித்துள்ளது.