‘ஜென்டில்மேன் 2’ படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கவுள்ளதாக கே.டி.குஞ்சுமோன் அறிவிப்பு ….!

ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், மதுபாலா நடிப்பில் வெளியான படம் ‘ஜென்டில்மேன்’. கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது மீண்டும் படங்கள் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் :-

‘ஜென்டில்மேன்’ படத்தை விட இரண்டு மடங்கு பிரம்மாண்டத்தை ‘ஜென்டில்மேன் 2’-ல் காணலாம்.

நவீன தொழில்நுட்பத்தில், ஹாலிவுட் படங்களின் தரத்தில், மெகா பட்ஜெட்டில் ‘ஜென்டில்மேன் 2’ உருவாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்தப் படம் தயாராகவுள்ளது. என கூறியுள்ளார் .