புதுடெல்லி: புவிசார் அரசியலால் ஏற்படும் தாக்கம், உலகளாவிய அளவில் நிறுவனங்களுக்கு பெரிய சவாலாக மாறும் என்றுள்ளார் கார்ப்பரேட் அதிகாரியான ரித்தேஷ் அகர்வால்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், “புவிசார் அரசியல் தாக்கம், உலகளாவிய நிறுவனங்களுக்கு ஒரு பெரிய ஆபத்தாக மாறப்போகிறது. பல்வேறு நாடுகள், நிறுவனங்களை பெரிய வணிகங்களாகப் பார்க்காமல், தங்களின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு உதவக்கூடிய ஒன்றாகத்தான் பார்க்கின்றன ஏகாதிபத்திய நாடுகள்; இதில் சீனாவும் ஒன்று.

இந்திய நிறுவனங்களுக்கு, மிகப்பெரிய அளவிலான உலகளாவிய வாய்ப்புகள் உள்ளன. இந்திய நிறுவனங்கள், உலகளவில் நன்கு மதிக்கப்படுகின்றவையாகவும் இருக்கின்றன.

வாய்ப்புகளுக்கான கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளன. எனவே, உலகளாவிய அளவில் வேகமாக வளர்வது குறித்து கவனம் செலுத்துகிறோம்” என்றார் அவர்.