இதுவரை ஜனநாயகக் கட்சியினரின் கோட்டையாக இருந்து வந்த ஜியார்ஜியா மாகாணத்தில் இப்போது ஜனநாயக கட்சியின் ஹிலாரி கை ஓங்கியிருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

hillary8

யூகவ் அமைப்பு சமீபத்தில் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜியார்ஜியா மாகாணத்தில் ஹிலாரி கிளிண்டன் 46.9% – 44.4% என்ற விகிதத்தில் முன்னனியில் இருப்பதாக தெரிகிறது. ஜியார்ஜியா மாகாணம் பில் கிளிண்டன் காலத்துக்குப் பின் ஜனநாயகக் கட்சியின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. இங்கும் ஹிலாரிக்கே ஆதரவு அதிகம் என்பது கருத்துக்கணிப்பின் முடிவில் தெரியவந்துள்ளது.
ஹிலாரி ஏற்கனவே வடக்கு கரோலினா, புளோரிடா போன்ற மாகாணங்களில் முன்னிலையில் இருக்கிறார். யூகவ் அமைப்பின் கருத்துக் கணிப்பின்படி ஜியார்ஜியாவில் ஹிலாரி கிளிண்டன் 46.9% – 44.4 என்ற விகிதத்தில் ட்ரம்பை முந்துகிறார். ட்ரம்ப் வெள்ளை நிறத்தவர் மத்தியில் 66%-23% என்ற விகிதத்தில் முன்னனியிலும், ஹிலாரி கருப்பினத்தவர் மத்தியில் 87%-8% என்ற விகித்த்திலும் முன்னனியில் உள்ளனர்.
ஜியார்ஜியாவில் ஆண்கள் மத்தியில் எடுத்த கணக்கெடுபில் ட்ரம்ப் 48% – 42% என்ற விகிதத்தில் முன்னனியில் உள்ளார். பெண்களிடத்தில் ஹிலாரி 51% – 41% என்ற விகிதத்தில் முன்னனியில் இருக்கிறார்.
ஆக மொத்தத்தில் ஹிலாரி கிட்டத்தட்ட பெரும்பாலான மாகாணங்களில் ஏறுமுகத்தில் இருப்பது தெரியவருகிறது.