ஜெர்மன் பேட்மின்டன் – இந்தியாவின் அஜய் ஜெயராம் வெற்றி

பிராங்க்பர்ட்: ஜெர்மன் பாட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியா சார்பாக பங்கேற்ற அஜய் ஜெயராம் வெற்றி பெற்றார்.

ஜெர்மனியில் தற்போது சார்லர்லக்ஸ் ஓபன் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெறுகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜய் ஜெயராம் – பெல்ஜியத்தின் மேக்ஸிம் மொரீல்ஸ் மோதினர்.

இந்தப் போட்டியில் 21-8, 21-8 என்ற செட் கணக்கில் பெரிய வெற்றியை ஈட்டினார் அஜய் ஜெய்ராம்.

அதேசமயம், நடப்புச் சாம்பியனான இந்தியாவின் லக்சயா சென் மற்றும் சுபாங்கர் தே ஆகிய இருவரும் நேரடியாக இரண்டாம் சுற்றில் பங்கேற்கின்றனர்.