டூபிங்கன், ஜெர்மனி :

கொரோனா வைரஸ் நோய்க்கு குறைந்த வலிமையிலான (Low-Dose) தங்கள் மருந்துகள் சிறந்த பலனை தருவது சோதனையில் நிரூபிக்கப்பட்டால், இந்த மருந்துகளை தற்போதைய தங்கள் உற்பத்தி திறனில் பெருமளவில் உற்பத்தி செய்ய முடியும் என்று ஜெர்மனியின் க்யூர்வேக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயை எதிர்கொள்ள தயாராகும் கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணியால் (CEPI) க்யூர்வேக் நிறுவனத்திற்கு கடந்த ஜனவரி மாதம் 62,000 கோடி ருபாய் நிதியளிக்கப்பட்டது, இதனைத்தொடர்ந்து குறைந்த வலிமையிலான தடுப்பூசியின் ஆரம்ப கட்ட சோதனையை நிகழ்த்தியுள்ளது க்யூர்வேக்.

ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பகுதியை சேர்ந்த இந்த நிறுவனம், ஜூன் அல்லது ஜூலை மாதங்களுக்குள் பரிசோதனைக்காக தடுப்பூசி தயாராகிவிடும் என்றும் அதன்பின் மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி பெறப்படும் என்றும் கூறிவருகிறது.

“தாங்கள் மேற்கொண்டிருக்கும் இந்த குறைந்த வலிமையிலான மருந்து ஒரு கோடி மருந்துகள் ஒட்டுமொத்தமாக ஒரே உற்பத்தி சுழற்சியில் தயாரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக” டூபிங்கன் தலைமை உற்பத்தி அதிகாரியும் இணை நிறுவனருமான ஃப்ளோரியன் வான் டெர் முல்பே கூறினார்.

ஒரு உற்பத்தி சுழற்சி என்பது பொதுவாக பல வாரங்கள் நீடிக்கும், அதுபோல் ஒரு நபருக்கு நோயெதிர்ப்பு சக்தி வர ஒன்றுக்கு மேற்பட்ட டோஸ் தேவைப்படலாம், ஆனாலும் ஒரு உற்பத்தி சுழற்சியில் பல லட்சம் பேருக்கு தேவையான மருந்து உற்பத்தி செய்யமுடியும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசி கண்டறிவதில் இரு நிறுவனங்கள் சிறந்து விளங்குவதாக தற்போது தேர்வாகி இருக்கிறது, அவற்றின் தயாரிப்புகள் அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருக்கிறது.

க்யூர்வேக் மெசஞ்சர் ஆர்.என்.ஏ (mRNA) மூலக்கூறுகளில் நிபுணத்துவம் பெற்றது, இது புற்றுநோய்கள் அல்லது தொற்று நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் சிகிச்சை புரதங்களை உருவாக்க மனித உயிரணுக்களை தூண்டுகிறது.

இந்த துறையில் சிறந்து விளங்கும் யு.எஸ். பயோடெக் நிறுவனமான மோடெர்னாவுடன் இது போட்டியிடுகிறது, இந்த நிறுவனமும் சி.இ.பி.ஐ நிதியை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஃபைசர் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் இயங்கும் ஜெர்மனியை சேர்ந்த பயோஎன்டெக் நிறுவனமும் இந்த போட்டியில் உள்ளது.

இந்நிலையில், நோய்க்கிருமிகளுக்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியையும் உருவாக்க 18 மாதங்கள் வரை ஆகும் என்று அமெரிக்க சுகாதார உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.