பெர்லின்: தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியான நிலையில், அலுவலகம் வந்து பணிகளை மேற்கொண்டார் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல்.

கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி காய்ச்சல் காரணமாக மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றார் ஏஞ்சலா மெர்கல். ஆனால், அந்த மருத்துவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்ததும் பெரும் அதிர்ச்சியடைந்தார் ஏஞ்சலா மெர்கல்.

இதனால், தனக்கும் தொற்று ஏற்பட்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில், கடந்த 14 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். எனினும் அவருக்கு பல கட்டங்களாக பரிசோதனை நடத்தியதில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று தனது அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டார். இதனை அவரது அலுவலக செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தினார்.

கொரோனா வைரஸ், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஏனைய ‍ஐரோப்பிய நாடுகளைப் போன்று, ஜெர்மனியையும் உலுக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.