சென்னை,

மிழகத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மனி தம்பதியினரின்  நன்றியுள்ள ஜீவனான நாயை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுவிட்டனர்.

மெரினா கடற்கரைக்கு  வந்தபோது, அந்த  நாயை மர்ம நபர்கள் யாரோ கடத்தி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நாளை மீட்டுத்தரக்கோரி  ஜெர்மன் தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டெஃபன் காக்ரா. தனது மனைவியுடனும் தனது செல்லப்பிராணியான லூக் என்கிற நாயுடன் ஜெர்மெனியிலிருந்து தங்களது வேனிலேயே இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார்.

சென்னைக்கு சுற்றிப் பார்க்க வந்த அந்த தம்பதியினர் கடந்த 8ம் தேதி மாலை மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அப்போது காரின் வெளிப்புறம் தங்களது செல்ல நாயை கட்டி வைத்திருந்தனர்.

இந்த நாயை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். நாயை காணாத தேடிய அந்த தம்பதியினிர் அருகிலுள்ள மெரினா காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாம்பிடம் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிய செல்லப்பிராணியை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படுமென விளம்பரமும் செய்துள்ளனர்.

இதனிடையே, லூக்கை கண்டுபிடிக்க வாட்சப் குரூப் ஒன்றையும் ஜெர்மனி தம்பதியினர் தொடங்கியுள்ளனர்.

மெரினா கடற்கரையிலிருந்து ஆட்டோ ஒன்றில் லூக் கடத்திச் செல்லப்பட்டதாக இந்த வாட்ஸ் அப் குரூப்புக்கு ஒருவர் மெசேஜ் செய்துள்ளதாகவும் மெரினா போலீசாரிடம் ஜெர்மனி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

நாய் காணாமல் போனது குறித்து ஜெர்மன் தம்பதியினர் கண்ணீர் மல்க கூறியதாவது,

 

ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்டெஃபான் – ஜெனின் என்ற இளம் தம்பதிக்கு உலகம் முழுவதும் சுற்றிப்பார்க்க ஆசை.  இதற்காக பிரத்யேக வேன் ஒன்றை வாங்கி அதன்மூலம்  கடந்த 2016 ஏப்ரல் மாதம் ஜெர்மனியிலிருந்து புறப்பட்டனர்.

முதலில் ஐரோப்பிய நாடுகளில் தங்கள் சுற்று பயணத்தை தொடங்கினர். தங்களது சொந்த வேன் மூலமாக  தரை வழியாக ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் 25 நாடுகளை சுற்றி தற்போது இந்தியா வந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் தெருவோரமாக பசியில் கத்திக் கொண்டிருந்த நாய்குட்டி யை மீட்டு, அதற்கு லூக் என்று பெயரிட்டு, தங்களது பயணம் முழுவதும், ஜெர்மனி தம்பதியர் உடன் அழைத்து வந்துள்ளனர்.

ஆர்மேனியா நாட்டில் கடும் பனிப்பொழிவில் சிக்கி வழி தெரியாமல் தம்பதியினர் இருவரும் பிரிந்து விட, இந்த நன்றியுள்ள லூக் தான் இருவரையும் கண்டுபிடித்து சேர்த்து வைத்துள்ளது.

அதுபோல ஒருமுறை பாம்பிடம் இருந்து இவர்களை காப்பாற்றி உள்ளதை நினைவு கூர்ந்த அவர்கள்,  தங்களின் பயணத்தின்போது  துணையாக லுக் இருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தபோது, தனது நாய் திருட்டு போய்விட்டது குறித்து கண்ணீர் மல்க தேடி வருகின்றனர்.

நாயைக் கண்டுபிடிக்க சமூக வலைதளங்கள் மூலம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர்களின் விசா வரும் 21ம் தேதியோடு முடிவடைகிறது. அதையடுத்து இவர்கள்  இலங்கைக்கு செல்ல இருக்கிறார்கள்.

அதற்குள் லூக்-ஐ எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு பகுதியாகத் தேடி வருகின்றனர்.

இந்த நாய் குறித்து தகவல் தெரிந்தால், மெரினா காவல் நிலையத்திற்கு, 044-23452558 என்ற எண்ணிலோ அல்லது ஸ்டெஃபானின் செல்போன் எண்ணான 7357366627 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட உள்ளது.

தங்களது உயிரை காப்பாற்றிய நன்றி உள்ள ஜீவனா தங்களது நாய்க்குட்டியை எப்படியாவது கண்டுபிடித்து அழைத்து செல்ல வேண்டும் என்று உறுதியோடு தேடி வருகிறார்கள்.