பெர்லின்

ஜெர்மனியில் கூட்டணி பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் ஆட்சி கவிழும் சூழல் உருவாகி உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த தேர்தலில் பழமைவாத கிறுத்துவ கட்சி 33% சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற்றது.  ஆட்சியை அமைத்த அந்தக் கட்சியின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் பெரும்பான்மை இன்றி ஆட்சி நடத்தி வந்தார்.  அதனால் எஃப் டி பி கட்சியுடன் கூட்டணி அமைப்பத் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஆனால் அந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.  அதைத் தொடர்ந்து பெரும்பான்மை இல்லாத ஏஞ்சலாவின் ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  ஏஞ்சலா ஜெர்மன் அதிபர் ஃப்ராங்க் வால்டரை சந்தித்து புதிய தேர்தல் நடத்த கோரிக்கை விடுக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏஞ்சலா கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஜெர்மனியின் பிரதமர் பதவி வகித்து வருகிறார்.  தொடர்ந்து 3 முறை அவர் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.