பெர்லின்

குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி போடாத பெற்றோருக்கு ஜெர்மன் அரசு $ 2800 அபராதம் விதிக்க உள்ளது.

உலகில் பல நாடுகளில் தட்டம்மை நோய் உள்ளது. சென்ற வாரம் யுனிசெஃப் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பின்படி உலகெங்கும் 1,10, 000 பேர் இந்த நோயால் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் ஆவார்கள். இந்த நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டு வந்த போதிலும் இந்த வருடம் மட்டும் 2 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் விடப்பட்டுள்ளனர்.

இந்த தடுப்பூசி இரண்டு முறை போடப்படுகிறது. ஜெர்மனியில் முதல் தடுப்பூசி 97% குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. ஆனால் இரண்டாம் ஊசி அதில் 93% பேருக்கு மட்டுமே போடப்பட்டுள்ளது. இரு ஊசிகளும் முழுமையாக போடாப்படாத குழ்னதைகளில் 95% பேருக்கு இந்த நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதை ஒட்டி ஜெர்மன் அரசின் சுகாதாரத் துறை வெளியிட்ட அறிவிப்பில் இந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போடத பெற்றோர்களுக்கு $ 2800 அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.95 லட்சம் ஆகும். ஏற்கனவே இது போல் நியூயார்க் நகர சுகாதாரத் துறை $1000 அபராதம் விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.