டுயிஸ்பர்க்,
பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.
ஜெர்மனியில் பிறந்து 40 நாட்களான பெண் குழந்தையை பிரபல ஆன்லைன் தளமான eBay- யில் விற்க விளம்பரம் கொடுக்கபட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து டுயிஸ்பர்க் நகர போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
baby-sale
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
eBay-யில் மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை 5000 யூரோவிற்கு (ரூ. 3.67லட்சம்) விற்க போட்டோவுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்த, அந்த குழந்தையின்  பெற்றோர்களின் குடியிருப்பில் நடத்திய சோதனையில்,குழந்தையை ஆன் லைனில் விற்க பதிவு செய்ததற்கான ஆதாரம் சிக்கியது.
குழந்தையை விற்க முயன்ற பெற்றோர்கள் அகதிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும். மனித கடத்தல் என்ற சந்தேகத்தில் பேரில் பெற்றோர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.