உலககோப்பை ஹாக்கி: நெதர்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி வெற்றி

உலககோப்பை ஹாக்கி தொடரில் நெதர்லாந்தை வீழ்த்தி 4-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றிப்பெற்றது.

14வது உலககோப்பை ஹாக்கி தொடர் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட 16 அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதின.

germany

போட்டி தொடங்கப்பட்ட 13வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் மிர்கோ புருஜ்சர் ஒரு கோல் அடுத்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின்னர், அதிரடியாக விளையாடிய ஜெர்மனி அணி ஆட்டத்திம் போக்கை தனது கையில் எடுத்துக் கொண்டது.

ஜெர்மனியின் மதியாஸ் முல்லர் 30வது நிமிடத்திலும், லூகாஸ் வெண்பெர் 52வது நிமிடத்திலும், மார்கோ 54வது நிமிடத்திலும், கிறிஸ்டோபர் 58வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

இறுதியில் நெதர்லாந்து அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து காலிறுதி சுற்றுக்கு ஜெர்மனி தகுதி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி