ஃபிரான்க்ஃபுரூட்:

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகர கிடங்கியில்  வைத்திருந்த 374 டன் தங்கம் மீண்டும் ஜெர்மன் நாட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது.

கிழக்கத்திய நாடுகளுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பனிப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த சமயத்தில் மேற்கு ஜெர்மனி தங்களிடம் இருந்த தங்க கட்டிகளை பாரிஸ், லண்டன், நியூயார்க் ஆகிய இடங்களில் இருந்த மத்திய வங்கியின் பத்திர கிடங்கிகளுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைத்தது.

சோவியத் நாடுகள் இவற்றை பறிமுதல் செய்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே ஜெர்மனி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது. அச்சம் விலகிய பின்னரும் இவற்றை ஜெர்மனிக்கு மீண்டும் கொண்டு வருவதில் தயக்க நிலை இருந்தது. அதிக மதிப்புள்ள தங்கம் என்பதால் திருடர்கள் மீதான அச்சமும் ஒரு காரணமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டிற்குள் பாரிஸ் கிடங்கில் உள்ள 374 டன் தங்கத்தை தாய்நாட்டிற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயித்து ஜெர்மனியின் மத்திய வங்கி ரகசிய நடவடிக்கை எடுத்தது. இதன் மதிப்பு 15 பில்லியன் டாலராகும். ஆனால், திட்டமிட்டதை விட முன்கூட்டியை இந்த தங்கத்தை தாய்நாட்டிற்கு ஜெர்மனியின் மத்திய வங்கி தற்போது கொண்டு வந்து சேர்த்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இறுதி கட்டமாக 91 மெட்ரிக் டன் தங்கம் இந்த ஆண்டு ஜெர்மன் தலைநகரான பிராங்ஃபுரூட் நகருக்கு வந்து சேர்ந்துள்ளது. இதன் மூலம் தங்கம் கையிருப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தை ஜெர்மன் பிடித்துள்ளது.