பெர்லின்:

ஜெர்மனியில் 106 நோயாளிகளைக் கொன்ற நர்சிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜெர்மனியின் பிரெமன் நகரில் உள்ள டெல்மென்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் நீல்ஸ் ஹோகெல் (வயது 41) என்ற நர்ஸை ஒரு கொலை வழக்கில் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மேலும் 90 பேரை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 1999ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை அவர் 16 பேரை கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நடந்த விசாரணையில் நீல்ஸ் கூறுகையில், ‘‘இதய செயல் இழப்பு அல்லது மொத்தமாக உடல் செயல் இழப்பை ஏற்படுத்த கூடிய மருந்தை ஊசி மூலம் நோயாளிகளுக்கு செலுத்தினேன். அவர்களை காப்பாற்றவும் முயன்றேன். காப்பாற்றினால், மற்றவர்களை விட திறமையானவள் என்ற பெயர் கிடைக்கும் என செய்தேன்’’ என்றார்.