பெர்லின்: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழை வழங்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது.

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 57,298 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரசால் 455 பேர் நோயால் இறந்துள்ளனர் என்று தொற்று நோய்களுக்கான ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

13,989 பேர் தென் மாநிலமான பவேரியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் கூறி உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிக்சைகள் தீவிரப்படுத்தப்பட்டதில் குணம் அடைந்தவர்களுக்கு என சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழ் வழங்க திட்டமிட்டுள்ளது. வைரசிஸிலிருந்து யார் மீண்டு வந்தார்கள் என்பதை குறிக்க கொரோனா வைரஸ் “நோய் எதிர்ப்பு சக்தி சான்றிதழ்களை” அறிமுகப்படுத்த ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான நடைமுறைகள், பிரவுன்ச்வீக்கில் உள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ் தொற்று ஆராய்ச்சிக்கான மையத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஆராய்ச்சி அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த ஆராய்ச்சி மையம், அதற்காக ரத்த பரிசோதனைகள் செய்ய திட்டமிட்டுள்ளது.

அந்த பரிசோதனைகள் மூலம் கொரோனா வைரஸ் இருக்கிறதா, இல்லையான என்பதை அறிய முடியும். கொரோனா இல்லை என்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த திட்டம் ஏப்ரல் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.