ஜெர்மனி:  கால்பந்து வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெற்றார்!

 

ஜெர்மனி:

டந்து முடிந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி தோல்வி அடைந்ததை அடுத்து நட்சத்திர வீரரான ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.

ஜெர்மனி கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் ஸ்வெயின்ஸ்டெய்கர்.  31 வயதான  இவர் களத்தில் இறங்கினாலே  எதிர்த்து ஆடும் வீரர்கள் உஷாராக இருப்பார்கள்.  களத்தின்   நடுவில் இருந்து பந்தை நகர்த்தி கொண்டு சென்று, அசால்ட்டாக கோல் போடுவதில் திறமையானவர்.

Germany v Argentina: 2014 FIFA World Cup Brazil Final...RIO DE JANEIRO, BRAZIL - JULY 13:  Bastian Schweinsteiger of Germany kisses the World Cup trophy after defeating Argentina 1-0 in extra time during the 2014 FIFA World Cup Brazil Final match between Germany and Argentina at Maracana on July 13, 2014 in Rio de Janeiro, Brazil.  (Photo by Clive Rose/Getty Images)

தனது டுவிட்டர் பக்கத்தில், தான் சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.  இதற்கான சரியான  காரணம் எதுவும் தெரிவிக்க வில்லை.

ஆனால், ஸ்வெயின்ஸ்டெய்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருப்பது ஜெர்மனி கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலககோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெற்று உலக கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இந்த வருடம் நடைபெற்ற யூரோ  கால்பந்து போட்டியில், அரையிறுதியிலேயே பிரான்சிடம் தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

இதன்காரணமாக ஜெர்மனி கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில்  ஸ்வெயின்ஸ்டெய்கர் தெரிவித்திருப்பார் என கூறப்படுகிறது.

ஜெர்மனி அணிக்காக 120 போட்டிகளில் விளையாடி 20 கோல்களை ஸ்வெயின்ஸ்டெய்கர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வெயின்ஸ்டெய்கர் டுவிட்டடரில் மேலும் கூறியதாவது:

2018-ல் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிசுற்று போட்டி நடைபெற்று வருகிறது. நார்வே அணியுடன் ஜெர்மனி மோதும் போட்டி செப்டம்பர் 9ந்தேதி நடைபெறுகிறது என்று தெரிவித்து உள்ளார்.

 ஸ்வெயின்ஸ்டெய்கர்
ஸ்வெயின்ஸ்டெய்கர்

2014 உலகக் கோப்பையை வென்றது போன்ற ஒரு ஒரு மகத்தான தருணம் எனக்கு மறுபடியும் அமையவில்லை. உலகக் கோப்பை தகுதி சுற்றில் ஜெர்மனி சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன்

நான் ஓய்வு பெற சரியான நேரம் இதுதான் என்றும் இது குறித்து நான் ஏற்கெனவே பயிற்சியாளருக்கு தகவல் தெரிவித்து விட்டேன் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும்.  உங்கள் பிரதிநிதியாக நான் விளையாடிதில் பெருமை அடைகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஸ்வெயின்ஸ்டெய்கர் கடந்த 12-ம் தேதி செர்பியாவைச் டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச்சை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.