குறைந்து வரும் கொரோனா தொற்று : ஜெர்மனி சுகாதாரத்துறைத் தலைவர் மகிழ்ச்சி

பெர்லின்

ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறைத் தலைவர் லோதர் வெய்லர் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று ஜெர்மனியிலும் பரவியது.

இந்த தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.

எனவே இதற்காக போடப்படும் வரைபடத்தில் தொற்று எப்போதும் ஏறுமுகமாகவே இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களாக வைரஸ் தொற்று சற்று குறைந்து வருகிறது.

இது குறித்து தாம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக ஜெர்மன் நாட்டின் சுகாதாரத் துறை தலைவர் லோதர் வெய்லர் கூறி உள்ளார்.

மேலும் அவர் விரைவில் இந்த கொரோனா தொற்று வரைபடம் எவ்வித ஏற்றமும், இல்லாமல் சமநிலைக்கு வரும் என தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

You may have missed