தெலுங்கானாவை தொடர்ந்து கேரளாவில் ‘ஜெயில் சுற்றுலா’: விரைவில் அறிமுகம்

திருவனந்தபுரம்:

கேரளாவில் ‘ஜெயில் சுற்றுலா’  என்ற  24 மணி நேர புதிய திட்டத்தை கேரள சிறைத்துறை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, சிறை அனுபவத்தை பெற விரும்புபவர்கள்,  பணம் செலுத்தி கைதிகளைப்போல  சிறையில் தங்கி அனுபவத்தை பெறலாம்.

இந்த திட்டம் ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது கேரளாவிலும் அறிமுகப்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஜெயில் அனுபவத்தை விரும்பும் பொதுமக்கள், அந்த அனுபவத்தை கைதிகளைப்போ  பெற்று கொள்ள கேரளா சிறை துறை இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது

‘பே அண்டு ஸ்டே’ (Pay and Stay)  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள விய்யூர் மத்திய சிறையின் ஒரு பகுதியை ‘ஜெயில் அருங்காட்சியகம்’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டதும், பொது மக்கள் 24 மணி நேரம் சிறை வளாகத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஜெயில் அனுபவத்தை பெறலாம்.

பணம் செலுத்தி இவ்வாறு ஜெயிலுக்கு செல்பவர்களுக்கு தேவையான சிறை உடை,  சிறை உணவு வழங்கப்படும் என சிறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறை அருங்காட்சியகம் அமைக்க திட்ட குழு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான, 3 கோடி ரூபாய் நிதியும் 2018-19 ஆண்டிற்கான முதல் நிலையில் அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

“மாநில அரசின் ஒப்புதலுக்காக இந்த திட்டம் குறித்த விவரங்களை அரசிடம் சமர்பித்துள்ளதாக தெரிவித்து உள்ள சிறைத்துறை ஐஜி,  இதற்கான கட்டணம் இன்னும் உறுதியாக நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறினார்.

இந்த சிறை அருங்காட்சியகத்தை   சென்னை சார்ந்த கட்டிட நிறுவனம் மற்றும் , கேரளாவை சேர்ந்த நிர்மிதி கேந்திரா ஆகியவை இணைந்து வடிவமைக்க உள்ளனர். இதன் காரணமாக மாநில அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ‘ஃபீல் தி ஜெயில்’  என்ற திட்டம்  தெலுங்கான மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள 220 ஆண்டுகள் பழைமையான சிறையை, பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிறையில் தங்க விரும்பி னால் 24 மணி நேரத்திற்கு  500 ரூபாய் கட்டணம் தெலுத்தி தங்கலாம்.

அவ்வாறு தங்கும் நபர்களுக்கு  ஜெயில் சீருடை, உணவு, தட்டு, கிளாஸ், படுக்கும் வசதி அனைத்தும் சிறை செட்-அப்பில் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.