2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்! இந்தியாவில் பார்க்க முடியுமா?

டெல்லி:

டந்த ஆண்டு 2019 டிசம்பர் 26-ம் தேதி சூரிய கிரகணம் தென்னிந்தியாவில் தெளிவாக தெரிந்த நிலையில், 2020ம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை (ஜனவரி 10ந்தேதி) நடைபெற உள்ளது. ஆனால், இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்ப்பது சிரமம் என்று கூறப்படுகிறது.

சந்திர கிரகணம் (lunar eclipse) என்பது சூரியனின் ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்கிறது. இது கதிரவன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது மட்டுமே சாத்தியமாகிறது. நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைக்கப்படும் அளவு, அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.

சந்திர கிரகணத்தில், முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், தெளிவற்ற சந்திர கிரகணகம், என 3 வகைகள் உள்ளன. அதன்படி நாளை நிகழ உள்ள சந்திர கிரகணமானது தெளிவற்ற சந்திர கிரகணம் (penumbral lunar eclipse) என்று கூறப்படுகிறது. இது இந்தியாவில் தெரியாது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

சந்திர கிரகணம் இந்திய நேரப்படி, நாளை இரவு சுமார் 10.30மணி முதல் அதிகாலை 2.30மணி வரை நீடிக்கும் என்றும், சுமார்  இந்த 4மணி நேர இடைவெளிக்குள்  90சதவீத நிலவின் பரப்பு பூமியின் நிழலால் மறைக்கபட்டு, வெளிவட்டப் பாதை மட்டும் நிழல் போலத் தோன்றும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கிரகணம்,  ஐரோப்பிய நாடுகள், ஆசியாவின் பெரும்பாலான பகுதி, ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த சந்திர கிரகணம், ஜூலை 5, 2020 நிகழும் என்றும், அதுவும்  தெளிவற்ற கிரகணமாகவே இருக்கும், இதை அமெரிக்கா,, மேற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பார்க்க முடியும் என்று தெரிவிள்ள ஆய்வாகள்ர்கள், அதையடுத்து,  நவம்பர் 30ந்தேதி மீண்டும் ஒரு கிரகணம் நிகழும் என்றும் கூறி உள்ளது.இந்த கிரகணமானது  கிஅமெரிக்கா, வடக்கு ஐரோப்பா, கிழக்காசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பார்க்க முடியும் என்று கூறி உள்ளது.