ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GetWellSoonTHALA …!

நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் ’வலிமை’

அஜித்துடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு முடிவடைந்துவிட்டாலும், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை . ஆனால் யாமி கெளதம் நாயகியாக நடித்து வருகிறார் என்ற தகவல் மட்டுமே வெளியாகியுள்ளது.

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணிபுரியும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் . 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்பதையும் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில் “அஜித் ஒரு பைக்-சேஸ் காட்சி எடுக்கப்பட்ட போது வாகனம் சறுக்கியதால், அவருக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது .இதனால் சிகிச்சையில் இருக்கும் அஜீத் சற்று ஓய்வில் உள்ளார் .

இதையறிந்த அவர் ரசிகர்கள் அஜீத் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்து வருகிறார்கள். மேலும் #GetWellSoonThala என்ற ஹெஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அதில் சீக்கிரம் திரும்பி வர வேண்டும் என ஏராளமாக ட்வீட்டுகள் பகிரப்பட்டு வருகின்றனர்.

“வலிமை” (Valimai) படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் மீண்டும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.